பதிவு செய்த நாள்
24
ஜூலை
2024
11:07
ஓக்லிபுரம்; ஸ்ரீராமபுரம், ஓக்லிபுரத்தில் உள்ள மூன்று முகம் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பெங்களூரு ஸ்ரீராமபுரம், ஓக்லிபுரத்தின் ஐந்தாவது முக்கிய வீதியில் மூன்று முகம் முருகன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில், இன்று காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் திருவிழா காலங்களில் அன்னதானம் வழங்குவது சிறப்பு. அதுவும் கும்பாபிஷேக காலங்களில், கோவிலில் தெய்வசக்தி நிறைந்திருக்கும். இவ்வேளையில், அன்னதானம் வழங்குவதால், சிறந்த பலன்களை கொடுக்கிறது. எனவே, பகல் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்று, முருகன் அருள் பெறுமாறு, கோவிலைச் சேர்ந்த கஜேந்திரன், செந்தில் குமார், சுப்பிரமணி, ஜீவா மற்றும் விழா குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.