சக்தி குமரன் செந்தில் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2024 11:07
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் அருள் பாலிக்கும் பெருமாளுக்கு திருவோணம் நட்சத்திரத்தில் அபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் அருள் பாலிக்கும் பெருமாளுக்கு நேற்று முன்தினம் மாலை அபிஷேகம் நடந்தது. பின்னர் துளசி மாலை சாற்றி ஆபரணங்களுடன் அருள் பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.