பதிவு செய்த நாள்
24
ஜூலை
2024
10:07
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், வரும், 29ம் தேதி இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தெப்பமும், 30ம் தேதி இரண்டாம் நாள் தெப்பமும், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பமும் நடக்கிறது. மூன்று நாட்கள் மலைப்படிகள் அடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை திருக்குளத்தில், முதல் நாளில், மூன்று சுற்றுகளும், இரண்டாம் நாளில், ஐந்து சுற்றுகளும், மூன்றாம் நாளில், ஏழு சுற்றுகளும் உற்சவர் முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிலையில் சரவணபொய்கையில் தெப்பம் கட்டும் பணிகள் தற்போது துரித வேகத்தில் நடந்து வருகிறது. தெப்பம் கட்டும் பணியில், 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் தெப்பம் தயார் நிலையில் இருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.