Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசநகரி அம்மனுக்கு திருவிளக்கு ... பழநி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை பழநி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
21 ஆண்டுகளுக்கு பின் நடந்த தேர் திருவிழா; வெறும் 5 அடி மட்டும் இழுத்த பரிதாபம்
எழுத்தின் அளவு:
21 ஆண்டுகளுக்கு பின் நடந்த தேர் திருவிழா; வெறும் 5 அடி மட்டும் இழுத்த பரிதாபம்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2024
12:07

கெங்கவல்லி; அருங்காட்டம்மன் கோவில் தேர் திருவிழா, 21 ஆண்டுகளுக்கு பின் நடந்த நிலையில், வெறும், 5 அடி மட்டுமே, பக்தர்கள் இழுத்து முடித்துக்கொண்டனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலுாரில் அருங்காட்டம்மன், பெரிய அம்மன், சின்ன அம்மன், கைலாசநாதர் கோவில்கள் உள்ளன. அங்கு, 2004ல் தேர் திருவிழாவின்போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு திருவிழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அனைத்து பிரிவினரும் திருவிழா நடத்த முன் வந்தனர். இதுதொடர்பாக பேச்சு நடத்தி, 21 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த, 19ல் சக்தி அழைத்தலுடன் விழா தொடங்கியது. 


நேற்று முன்தினம், ஒரு பிரிவை சேர்ந்த மக்கள், பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, முதல்முறை அங்கு வழிபட்டனர். தொடர்ந்து ஊரணி பொங்கல் நடந்தது. நேற்று காலை, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 5:00 மணிக்கு, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் விமலா, மரத்தேரின் உறுதித்தன்மையை பார்வையிட்டார். சக்கரம் வலுவாக இல்லாததால், 10 அடி துாரம் மட்டும் இழுத்துச்செல்லுங்கள் என, விமலா அறிவுறுத்தினார். 6:30 மணிக்கு, அருங்காட்டம்மன், பெரிய அம்மன், சின்ன அம்மன் சுவாமி சிலைகளை, தேர் மீது வைத்து வழிபட்டனர். இரவு, 7:40 மணிக்கு, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் முன்னிலையில் விழா குழுவினர், தேரை இழுத்தனர். 40 அடி உயர தேர் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், 5 அடி மட்டும் இழுத்து நிறுத்திவிட்டனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். 


காரணம் என்ன? விழா குழுவினர் கூறியதாவது: கடந்த, 20 ஆண்டுகளாக தேர் பயன்பாடின்றி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மரத்தில் செய்யப்பட்ட, 4 சக்கரங்களும் சேதமாகி இருந்தன. புதிதாக சக்கரம் அமைக்க, திருச்சி ‘பெல்’ நிறுவனத்துக்கு சென்றோம். வடிமைக்க, 6 மாதங்களாகும் என்றனர். இதனால் அடுத்தாண்டு புதிதாக இரும்பு சக்கரம் பொருத்திய தேர் செய்ய முடிவு செய்தோம். மேலும் இந்தாண்டில், அனைத்து பிரிவினரும் விழா நடத்த ஒப்புக்கொண்டதால், சேதமடைந்த தேரை, சிறிது துாரம் மட்டும் இழுத்து விழா நடத்த, அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர். அதன்படி திருவிழா நடந்தது. 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கீழக்கரை; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கோயில் விழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளால் பலகாரம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பவுர்ணமி நாளில் கிரிவலம் நடைபெற்று வந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாக தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
கோவை; ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பவுர்ணமி வரும் மாதங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar