Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் கரி வரதராஜ பெருமாள் ... தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழா; சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை தாண்டிக்குடி மந்தை காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மனுக்கு ஆடிப்பணியாரம்; சீலைக்காரியம்மனுக்கு படையல் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
அம்மனுக்கு ஆடிப்பணியாரம்; சீலைக்காரியம்மனுக்கு படையல் வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2024
10:07

உசிலம்பட்டி; உசிலம்பட்டி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் ஆடி மாதத்தை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். குலதெய்வ வழிபாட்டுக்காக ஆடிமாதத்தின் சிறப்பாக நடு ஆடிக்கு சீலைக்காரியம்மனுக்கு பணியாரம் படையல் வைத்து வழிபாடு நடத்தினர்.


உசிலம்பட்டி பகுதி கிராமங்களில் ஆடிமாதத்தை தலையாடி, நடு ஆடி, கடைசி ஆடி என பிரித்து விழாவாகக் கொண்டாடுகின்றனர். புது மணத் தம்பதியர்கள் ஆடி மாதத்தில் பிரித்து வைக்கும் நிகழ்வு, ஆடி 18 ல், பதினெட்டாம் பெருக்கு என நிலங்களில் விதைநடவு செய்தல் என விவசாயம் சார்ந்த பணிகள் நடக்கும் மாதமாக கொண்டாடுகின்றனர். விவசாய பணிகளை செய்ய உடலுக்கு வலு சேர்க்கும் விதமாக மூன்று ஆடிகளிலும் அசைவ உணவு சமைக்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. உசிலம்பட்டி அருகே உள்ள ஆனையூர் கிராமத்தில் சீலைக்காரி அம்மனுக்கு நடு ஆடி தினத்தில் பணியாரம் படையலிட்டு வணங்கும் வழக்கமும் தொடர்கிறது. இதற்காக நேற்று சீலைக்காரியம்மன் கோயில் முன்பாக பணியாரம் சுடும் பணியில் ஈடுபட்டனர். முத்துலட்சுமி, ஆனையூர்: காலம் காலமாக நடுஆடிக்கு முதல் நாள் இரவு சீலைக்காரியம்மனுக்கு பணியாரம் படையலிட்டு வழிபாடு நடத்துவோம். இரவில் படையலிட்டு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உண்ண கொடுப்போம். தை மாத பிறப்பில் கருப்பட்டி படையல், சித்திரையில் பொங்கல் வைத்து படையல் என பாரம்பரியமாக சீலைக்காரியம்மனை வழிபட்டு வருகிறோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar