Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ரூ.100 கோடி உண்டியல் ... காஞ்சியில் சப்த கன்னியர்கள் வீதியுலா காஞ்சியில் சப்த கன்னியர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1000 ஆண்டு பழமையான சோழர் கோவில் சீரமைப்பு பணியில் மந்தம் ஏன்?
எழுத்தின் அளவு:
1000 ஆண்டு பழமையான சோழர் கோவில் சீரமைப்பு பணியில் மந்தம் ஏன்?

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2024
12:07

பொன்னேரி; பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில், ராஜேந்திர சோழ மன்னரால் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத பர்வதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.


இக்கோவில், சோழர் கால கட்டடக் கலையை உணர்த்தும் வகையில் கருவறை, அர்த்தமண்டபம், மஹாமண்டபம், காமாட்சியம்மன், முருகன், விநாயகர், ஏழுமலையான் ஆகியவை தனித்தனி சன்னிதிகளுடன் அமைந்துள்ளன. இந்த கோவில் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கற்களால் நேர்த்தியாக கட்டப்பட்டது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில், சிதிலமடைந்ததைத் தொடர்ந்து, ஹிந்து அறநிலையத் துறை, 2020ல், 43.60 லட்சம் ரூபாயில் புனரமைப்பு பணிகளை துவக்கியது. கட்டுமான பணிகளுக்கு சிமென்ட், கம்பி உள்ளிட்டவை பயன்படுத்தாமல், பழமையான முறையில், சுண்ணாம்பு, கடுக்காய் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. முருகன், விநாயகர் ஆகிய சன்னிதிகள் முடிக்கப்பட்டு, தற்போது காமாட்சியம்மன், பர்வதீஸ்வரர் சன்னிதிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கி, நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில், முடிவு பெறாமல் மந்தகதியில் நடப்பதாக பக்தர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.


இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடக்கும், கடந்த நான்கு ஆண்டுகளாக விழா நடைபெறாமல் உள்ளது. கோவில் திருப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசும் கோவில் புனரமைப்பு பணிகளுக்கு தற்போது ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லாத நிலை உள்ளதால், கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar