Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் ஆதிபீடாபரமேஸ்வரி ... 1000 ஆண்டு பழமையான சோழர் கோவில் சீரமைப்பு பணியில் மந்தம் ஏன்? 1000 ஆண்டு பழமையான சோழர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் ரூ.100 கோடி உண்டியல் காணிக்கையை சுருட்டியவர்: 2 ஆண்டுக்கு பின் வெளிவந்த மோசடி
எழுத்தின் அளவு:
திருப்பதியில் ரூ.100 கோடி உண்டியல் காணிக்கையை சுருட்டியவர்: 2 ஆண்டுக்கு பின் வெளிவந்த மோசடி

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2024
12:07

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையில் பக்தர்கள் செலுத்திய வெளிநாட்டு கரன்சிகளை திருடிய தமிழகத்தை சேர்ந்தவர், ரூ.100 கோடி அளவிற்கு சொத்து சேர்த்துள்ளார். இந்த விவகாரம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மட்டும் தினமும் கோடிக்கணக்கில் வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஒருவர் ரூ.100 கோடி அளவிற்கு மோசடி செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவர், திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை செய்து வந்தார். அதன் வாயிலாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், அவரை சுமார் 20 ஆண்டுகளாக காணிக்கை பணம் கணக்கிடும் ஊழியர்களில் ஒருவராக தேவஸ்தான நிர்வாகம் நியமித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காணிக்கை பணம் எண்ணும் பகுதியில் இருந்து வெளியே வந்தபோது அவரின் நடவடிக்கையை கண்காணித்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.


ரூ.100 கோடி சொத்து; அப்போது அவர் தன்னுடைய மலக்குடலில் அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். விசாரணையில், பல ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் வெளிநாட்டு கரன்சிகளை திருடியதை ஒப்புக்கொண்ட ரவிக்குமார், அந்த பணத்தை பயன்படுத்தி சுமார் ரூ.100 கோடி அளவிற்கு தங்க நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு என பல சொத்துகளை வாங்கி குவித்ததாகவும் கூறியுள்ளார்.


நன்கொடை; இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பக்தர்களின் நம்பிக்கை கெட்டுவிடும் என்பதால், தேவஸ்தானம், லோக் அதாலத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றது. அப்போது, திருடிய காணிக்கை பணத்தை கொண்டு வாங்கிய சொத்துகளின் ஒரு பகுதியை ரவிக்குமார், தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பதுபோல் எழுதி வாங்கியுள்ளனர். இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வளவு நாட்கள் வெளியே தெரியாமல் இருந்த இந்த விவகாரம் பற்றி ஆந்திர மேல்சபை உறுப்பினர் ஒருவர், மாநில அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஆந்திர சட்ட மேல்சபையில் அமைச்சர் இந்த முறைகேடு குறித்து பேசியதை தொடர்ந்து, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar