பதிவு செய்த நாள்
31
ஜூலை
2024
12:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வெள்ளக்குளம் தென்கரை தெருவில் சந்தவெளியம்மன், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடித்திருவிழாவையொட்டி 28ம் தேதி காலை பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் காலை செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு முருகப்பெருமான் வீதியுலா வந்தார். நேற்று காலை 10:00 மணிக்கு சர்வதீர்த்த குளக்கரையில் இருந்து கரகம் புறப்பாடும், மதியம் 12:00 மணிக்கு செல்வ விநாயகர் கோவிலில் கூழ்வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு சந்தவெளியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வைத்தலும், இரவு 8:00 மணிக்கு வானவேடிக்கை நிகழ்ச்சியும், இரவு 8:30 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது. l காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில், ஆகாய கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கும், பாலசாஸ்தாவுக்கும் சிறப்பு அபிேஷகமும், தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்வும் நடந்தது. காலை 8:00 மணிக்கு கற்பக விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலமும், காலை 9:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், மதியம் 12:30 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது. இதில் பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னியர் வீதியுலா வந்தனர். இரவு, 10:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது.