திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இணை கமிஷனர் பொறுப்பேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2024 11:08
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை கமிஷனராக பணியாற்றி வந்த கார்த்திக் திண்டுக்கல் மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டார். இதையடுத்து, புதிய இணை கமிஷனராக தஞ்சாவூர் மண்டல இணை கமிஷனராக பணியாற்றிய ஞானசேகரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திருச்செந்துார் கோவில் இணை கமிஷனராக ஞானசேகரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், முன்னாள் இணை கமிஷனர் கார்த்திக், நகராட்சி தலைவர் சிவா நந்தி, கமிஷனர் கண்மணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.