கோவை ; ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கோவை தடாகம் ரோடு - லாலி ரோடு பால் கம்பெனி அருகே உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் பழங்களின் நடுவே மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோவை என். ஹெச். ரோடு - டவுன்ஹால் சந்திப்பில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் வெள்ளிக் காப்பு கவசத்தில் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வேப்பிலை மற்றும் வளையல் அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.