பக்தர்கள் நலனுக்காக மிளகாய் கரைசலில் குளித்த பூசாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2024 07:08
இண்டூர்; பக்தர்கள் நலம்பெற வேண்டி, இண்டூர் அருகே, 108 கிலோ மிளகாய் பொடி கரைசலில் பூசாரி குளித்து கருப்பசுவாமியிடம் வேண்டினார்.
தர்மபுரி மாவட்டம் இண்டூரை அடுத்த, நடப்பனஹள்ளியில் பெரிய கருப்பசுவாமி கோவில் உள்ளது. ஆடி அமாவாசையை ஒட்டி மூலவருக்கு நேற்று பல்வேறு அபிஷேகம் நடந்தது. மூலவர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி, பலியிட்டு வழிபட்டனர். கோவில் பூசாரி கோவிந்தன், கத்தி மீது ஏறி நின்று, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் குடும்பங்களில், தீவினை அகன்று, நன்மை ஏற்பட, கருப்ப சுவாமியை வேண்டிக்கொண்டு, 108 கிலோ மிளகாய் பொடி கரைசலில் பூசாரி குளித்தார். அதன் பிறகு மீண்டும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.