பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய பவானியம்மன் மூலவராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு நடைபெறும் விழாக்களில் ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.
கடந்த, 17 ம் தேதி துவங்கிய ஆடி மாத விழாவில், முதல் ஞாயிற்றுக்கிழமை கடந்த, 21ம் தேதி நடந்தது. இதில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, மாலை உற்சவர் அம்மன் சூர்ய பிரபை வாகனத்தில், பவானியம்மன் உமாமகேஸ்வரி அலங்காரத்தில் திரு வீதி உலா வந்து அருள்பாலித்தார். இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை, 4:00 மணிக்கு உற்சவர் அம்மன் குதிரை வாகனத்தில், ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாலை, 4:00 மணிக்கு நாக வாகனத்தில், உற்சவர் அம்மன் அனந்த சயன கோலத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.