திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவத்தை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆடிப்பூர உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். ஜூலை 29 ல் கொடியேற்றத்துடன் உத்ஸவம் துவங்கியது. தினசரி காலையில் திருவீதிப்புறப்பாடும், இரவில் வாகனங்களில் ஆண்டாள்,பெருமாள் புறப்பாடும் நடைபெற்று வருகிறது. இன்று காலை 10:48 மணிக்கு தேருக்கு தலை அலங்காரம் துவங்குகிறது. இரவு 8:00 மணிக்கு அன்ன வாகனத்தில் ஆண்டாள்,பெருமாள் திருவீதி வலம் வருவர். நாளை காலை 9:06 மணிக்கு மேல் காலை10:12 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளலும், மாலை 4:00 மணிக்கு மேல் 4:40 மணிக்குள் தேர் வடம் பிடித்தலும் நடைபெறும். ஆக. 8 காலையில் தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி மூலஸ்தானத்திற்கு எழுந்தருளலுடன் உத்ஸவம் நிறைவடையும்.