Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளையார்கோவிலில் ஆடித் தேரோட்டம்; ... திருவையாறு ஐய்யாறப்பர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம் திருவையாறு ஐய்யாறப்பர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரத்தில் குறத்தி அலங்காரத்தில் அம்மன்; படையலுடன் வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரத்தில் குறத்தி அலங்காரத்தில் அம்மன்; படையலுடன் வழிபட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

06 ஆக
2024
04:08

காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பல்வேறு அம்மன் கோவில்களில் இன்று ஆடி திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலாவும், கூழ்வார்த்தலும், கும்பம் படையலுடன் அம்மன் வர்ணிப்பு நடந்தது.

காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு கிராம தேவதை திருவாத்தி அம்மனுக்கு 10ம் ஆண்டு ஆடித் திருவிழா இன்று நடந்தது. விழாவையொட்டி நேற்று, காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேசமும், மூலவர் அம்மனுக்கு, குறி சொல்லும் குறத்தி அம்மன் அலங்காரமும், தொடர்ந்து ஜலம் திரட்டுதலும், உற்சவர் அம்மன் வீதியுலாவும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் ஊஞ்சல் சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 8:30 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடக்கிறது. நாளை இரவு 9:00 மணிக்கு சிங்காடிவாக்கம் ஏகாத்தம்மன் நாடக மன்றத்தினரின் நாடகம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம், திருக்காலிமேடு பிரதான சாலை, பாக்ரா பேட்டை, உப்பு குளம் நாக கன்னியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி காலை 11:00 மணிக்கு 108 பால்குட ஊர்வலமும், அம்மன் குடம் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 5:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், கும்பம் படையலும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் ரயில்வே சாலை தண்டுமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி காலை, அம்மன் கரகம் வீதியுலா வந்தது. மதியம் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழாவும், மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தலும், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், 9:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar