வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2024 11:08
வில்லியனுார்; வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தை அமைச்சர்கள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
வில்லியனுார் கோகிலாம்பிகை உடனுறை திருகாமீஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 7:30 மணிக்கு மேல் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மாட வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய விழாவாக ஆடிப்பூர தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 8:15 மணியளவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பொதுமக்கள் மற்றும் சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேர் இழுத்தனர். மாடவீதிகள் வழியாக சென்ற தேர் காலை 10:00 மணியளவில் நிலையை வந்தடைந்தது. இன்று 7ம் தேதி காலை தீர்த்தவாரி, வளையல் உற்சவம், நாளை இரவு 7:30 மணிக்கு தெப்பல் உற்சவம், 9ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருகாமீஸ்வரன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.