பதிவு செய்த நாள்
07
ஆக
2024
04:08
போடி; ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரத்தை முன்னிட்டு, போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை, திருமஞ்சன அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் இருந்த ஆண்டாளை தரிசனம் செய்தனர். அதன் பின் ஆண்டாள், சீனிவாசப் பெருமாள் நகர்வலம் புரிந்தனர்.
" போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன், கோயில், தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், குலாலர் பாளையம் காளியம்மன் கோயில், போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.