ஆடிப்பூர விழா; ஆண்டிபட்டி அம்மன் கோயில்களில் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2024 04:08
ஆண்டிபட்டி; ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டிபட்டி பகுதி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காளியம்மன் கோயில், முத்துமாரியம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசாமி கோயில் வளாகத்தில் உள்ள மாகாளி அம்மனுக்கு பக்தர்கள் வளையல், எலுமிச்சை பழங்களால் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.