Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: சுபநிகழ்ச்சி நடத்துவீங்க! ... கடகம்: நண்பர்களிடம் நடியுங்க! நன்றாகப் படியுங்க! கடகம்: நண்பர்களிடம் நடியுங்க! ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை)
மிதுனம்: குடும்பநிலை சுமார் வியாபாரம் ஜோர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 நவ
2012
02:11

மற்றவர் ஆலோசனையை ஏற்று நடக்கும் மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் ராகுவும், பதினொன்றாம் இடத்தில் கேதுவும் இடம்பெற்றுள்ளனர். ராகு, கேது பெயர்ச்சியில் கேது நல்ல பலன்களை வழங்குவார். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே சப்தம, புகழ் ஸ்தானத்தில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே ராசி, பாக்ய ஸ்தானத்தில் பதிகிறது. வருமானத்திற்கான புதிய வாய்ப்பு உருவாகும். வீடு, வாகனத்தில் இருக்கிற வசதியை பயன்படுத்திக் கொள்வது போதுமானது. புத்திரர்களின் பிடிவாத செயல்பாடு கண்டு வருத்தம் அடைவீர்கள். தக்க அறிவுரை கூறி வழிநடத்துவது அவசியம். ஆரோக்கியத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாத்திடுவீர்கள். கடின அலைச்சலால் அசதி ஏற்படலாம் கவனம். தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்பட்டாலும், உறவினர்களின் நடவடிக்கையால்கருத்துவேற்றுமை கொள்ளவாய்ப்புண்டு கவனம். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். சிலருக்கு தந்தைவழி சொத்தில் பங்கு பெறுகிற அனுகூலம் உண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர்கள். விருந்து,கேளிக்கையில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புண்டு. நண்பர்களிடம் உதவி பெறுவதும், செய்வதுமான நன்னிலை உண்டு.

தொழிலதிபர்கள்: தொழிலதிபர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வளர்ச்சி காண்பர். லாபமும் திருப்திகரமாக இருக்கும். பணியாளர் ஒத்துழைப்பும் சீராகக் கிடைக்கும். வங்கி நிதியுதவியுடன் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வர். தொழில் கூட்டமைப்பில் கவுரவமும் பொறுப்பான பதவியும் கிடைக்க வாய்ப்புண்டு.

வியாபாரிகள்:  வியாபாரிகள் புதிய உத்திகளைப் பின்பற்றி வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெறுவர். விற்பனை அதிகரித்து லாபவிகிதம் உயரும். புதிய கிளை துவங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சகவியாபாரிகளின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

பணியாளர்கள்:  அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சுய திறமையை வளர்த்து பணிகளை சிறப்புற செயல்படுத்துவர். நிர்வாகத்தினர் மத்தியில் நற்பெயர் உருவாகும். எதிர்பார்த்த சலுகை பயன் படிப்படியாகக் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும். சிலருக்கு விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்:  பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை விரைந்து நிறைவேற்றுவர். நிர்வாகத்தின் ஆதரவால் சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பபெண்கள் கணவரின் குறிப்பறிந்து செயல்படுவது நன்மை தரும். வீட்டுச்செலவுக்குத் தேவையான பணம் சீராக கிடைக்கும். அவரவர் வசதிக்கேற்ப ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் திருப்திகரமான மூலதனத்தில் உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர்.

மாணவர்கள்: மாணவர்கள் ஒருமுகத் தன்மையுடன் படித்து சிறந்த தரதேர்ச்சி பெறுவர். கல்விச் செலவுக்கு குறையிருக்காது. சக மாணவர் படிப்பில் சிறக்க இயன்ற அளவில் உதவுவீர்கள். படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் கவுரவமான பணியும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்:  சமூகப்பணியில் ஆர்வம் காட்டி மக்கள் செல்வாக்கைப் பெறுவர். தொண்டர்களின் அமோக ஆதரவால் அரசியலில் செல்வாக்கு கூடும். ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புக்களை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றுவீர்கள்.

விவசாயிகள்:  பயிர் வளர்ப்பில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். அபரிமிதமான அளவில் மகசூல் கிடைக்கும். விளைபொருட்களுக்கு கூடுதல் விலை பெறுவீர்கள்.  சிலருக்கு புதிதாக நிலம் வாங்கும் வாய்ப்புண்டு.

பரிகாரப் பாடல்:
தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

பரிகாரம்: அபிராமி அன்னையை வழிபடுவதால்  மங்கல நிகழ்வு உண்டாகும்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (26.4.2025 முதல் 13.11.2026 வரை) »
temple news
அசுவினி; நினைப்பது நடக்கும்.. உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ... மேலும்
 
temple news
கார்த்திகை: வியாபாரத்தில் முன்னேற்றம்..; உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு, கேது பகைவர்கள் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்ல காலம் வந்தாச்சு..; உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: குருவால் குறை தீரும்..! உங்கள் நட்சத்திர நாதனான குருவிற்கு, ராகுவும் கேதுவும் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்..கடந்த ஒன்றரை வருட காலமாக உங்கள் ராசிக்கு 8 ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar