நரிக்குடி தர்ம முனீஸ்வரர் கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2024 10:08
நரிக்குடி; நரிக்குடி தர்ம முனீஸ்வரர் கோயிலில் நடந்த ஆடித் திருவிழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கறி விருந்தில் ஆயிரக்கணக்கானோர் உணவருந்தினர்.
நரிக்குடி கொட்டக்காட்சியேந்தலில் தர்மமுனீஸ்வரர் கோயிலில் ஆடித் திருவிழாவில் பல்வேறு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. அதிகாலையில் எரிபூஜை நடந்தது. உணவை உருண்டையாக திரட்டி வானத்தை நோக்கி வீசுவர். பூமிக்கு திரும்பாது. சுவாமி அதனை உணவாக எடுத்துக் கொள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு மொத்தமாக சமைத்து அன்னதானம் நடைபெற்றது. காலை 6 முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.