பதிவு செய்த நாள்
13
ஆக
2024
05:08
கோவை; உக்கடம் பகுதியில், 61 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்ட பிரம்மாண்ட வெள்ளை முனியப்ப சுவாமி சிலை கண்திறப்பு விழா, பக்தர்கள் சூழ மேளதாளங்களுடன் விமரிசையாக நடந்தது.
இக்கோவிலில், பிரம்மாண்ட முனியப்ப சுவாமி சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பக்தர்கள் விடுத்து வந்தனர். பக்தர்கள் வேண்டுகோளின் படி, 61 அடி உயரத்துக்கு பிரம்மாண்ட முனியப்ப சுவாமி சிலை நிறுவப்பட்டது. இன்று சிலை கண்திறப்பு விழா நடந்தது. அதிகாலையில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் வழிபாடுகளுக்கு பின், சிவாச்சாரியர்கள் மேளதாளங்கள் முழங்க, முனியப்பசுவாமிக்கு கண்திறக்கும் வைபவத்தை நிறைவேற்றினர். இதையடுத்து, மலர் மாலைகள் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். இளநீர், பிரியாணி, பழவகைகள், சுருட்டு ஆகியவை சுவாமிக்கு படைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.