சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்; காஞ்சி மடாதிபதிக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2024 12:08
திருநெல்வேலி; தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில். இங்கு மூலஸ்தானத்தில் சிவனும், பெருமாளும் ஒன்றாக அருளுகின்றனர். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக் கிறார்கள்.சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சன்னதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிறப்பு மிக்க இத்தலத்தில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, கோயில் மகா கும்பாபிஷேக அழைப்பிதழை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம், கோயில் அறங்காவலர் ராமகிருஷ்ணன், துணைஆணையர் கோமதி வழங்கினர்.