கடையம் சூலப்பிடாரி அம்மன் கோயில் 64 அடி உயர தூக்குத்தேர் சரிந்து விழுந்தது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2024 01:08
விழுப்புரம்; கடையம் கிராமத்தில் சூலப்பிடாரி அம்மன் கோயில் தூக்குத்தேர் திருவிழாவையொட்டி, தூக்கி வரப்பட்ட தேர் சரிந்து விழுந்தது. பக்தர்கள் காயம் அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்த கடையம் கிராமத்தில் பழமைவாய்ந்த சூலப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூக்குதேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இன்று ஆத்திலியம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை நடைபெற்று, விநாயகர் கோவிலில் இருந்து 64 அடி உயரமுள்ள தேரை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், தங்கள் தோள் மீது சுமந்தபடி தூக்கிச்சென்றனர். அப்போது எதிர்பாரத விதமாக தூக்குத்தேர் சரிந்து விழுந்தது. இதில் சில பக்தர்கள் காயம் அடைந்தனர்.