தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2024 03:08
வில்லியனுார் : புதுச்சேரி அடுத்த வில்லியனூர் தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சி அம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி நடைபெற்று வந்தது. தேர் திருவிழாவின்போது கிராமத்தில் ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பு சாலையில் ஆடுகளை பலியிட்டு, சிந்தும் ரத்தத்தின் மீது தேர் செல்வது இந்த கோவிலின் தனிச் சிறப்பாகும். அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வாசலில் ஆடுகளை பலியிட்டனர். அதனை தொடர்ந்து, ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்பும் ஆடுகளை பலியிட்டது. தொடர்ந்து காலை 10:30 மணியளவில் பிடாரி மீனாட்சி அம்மன் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.