திரவுபதி அம்மன் கோயில் விழாவில் தருமர் பிறப்பு நிகழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2024 05:08
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற தருமர் பிறப்பு நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.9 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு 10:30 மணிக்கு கீழக்கோட்டை கிராமத்தார்கள் சார்பில் தருமர் பிறப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மூலவர் அம்மனுக்கு கிராமத்தார்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக தினமும் இரவில் பல்வேறு மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெற்று, முக்கிய விழாவான பூக்குழி விழா ஆக.30-ல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து செப்.1 ல் மஞ்சள் நீராட்டுதல் விழாவும், செப்.3 ல் பட்டாபிஷேகமும் நடைபெற்று விழா நிறைவடைகிறது.