கம்பம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட, சுருளியில் பக்தர்கள் நேற்று அதிகளவில் குவிந்தனர். கார்த்திகை முதல் நாள் மாலையணிந்து, 40 நாட்கள் விரதமிருந்து,ஐயப்பன் கோயிலுக்கு செல்கின்றனர். நேற்று அதிகாலை முதல் மாலை போட, சுருளியில் பக்தர்கள் குவிந்தனர். அருவியில் குளித்து, வேலப்பர் கோயிலில் மாலையணிந்தனர். சரண கோஷம் கேட்டபடி இருந்தது.அதேபோல உத்தமபாளையம் முல்லையாற்றங் கரையிலும் பக்தர்கள் அதிகாலையில் குளித்து, மாலையணிந்து தங்களின் விரதத்தை துவக்கினர்.
*பெரியகுளம் வராகநதி படித்துறை விநாயகர் கோயில் முன்பு ஏராளமான கன்னிச்சாமிகள், சரணகோஷத்துடன் மாலை அணிந்து கொண்டனர்.