Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் மழையை பொறுத்தே ... இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி விழா; பக்தர்கள் குவிந்தனர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடி ஏகாதசி வைபவம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடி ஏகாதசி வைபவம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2024
04:08

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆடி மாத ஏகாதசி வைபவம் நடந்தது.


காரமடை அரங்கநாதர் கோவிலில், இன்று ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கால சந்தி பூஜை, விஸ்வக் சேனர் ஆராதனம், புண்யாவதனம், கலச ஆவாஹனம் ஆகிய வைபவங்கள் நடந்தன. ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, தேன், நெய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால், ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு அரங்கநாத பெருமாள், வெள்ளி சப்பரத்தில், மேள, தாளம் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு, ஆஸ்தானம் எழுந்தருளிய அரங்கநாத பெருமாளுக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உச்ச கால பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, வேத பாராயணம் சாற்று முறை, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தரர்கள், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர், பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் ... மேலும்
 
temple news
குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த அகோபில மடம் சுவாமி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar