ரூபாய் நோட்டு அலங்காரத்தில் தவட்டு மாரியம்மன் அருள்பாலிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2024 11:08
மேட்டுப்பாளையம்; காட்டூர், ஜெகநாதன் லே அவுட்டில் தவிட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.