கருட சேவையில் சுந்தரராஜ பெருமாள்; பவித்ரோத்ஸவ விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2024 10:08
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பவித்ரோத்ஸவ விழா நேற்று முன்தினம் இரவு கருட சேவையுடன் நிறைவடைந்தது. கோயில்களில் உற்ஸவங்களின் போது ஏற்படும் ஒரு சில குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் பரிகார விழாவாக பவித்ரோத்ஸவம் நடக்கிறது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் வைகுண்ட மண்டபத்தில் எழுந்தருளினார். ஆக.15ல் விழா துவங்கி காலை, இரவு என பல்வேறு வகையான நெய்வேத்தியங்கள், தீபாராதனைகள் நடந்தன. ஆக. 19 இரவு 8:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் அருள் பாலித்தார். அப்போது மகா தீபாராதனைகள் நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து பவித்ரோத்ஸவ விழா நிறைவடைந்தது.