அனுப்பர்பாளையம்; திருப்பூர், பி.என்., ரோடு, அண்ணா நகர் தியாகி குமரன் காலனியில் ஸ்ரீ சுடலை மகாராஜா மற்றும் ராஜகாளி அம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், பிரம்ம சக்தி கோவில் உள்ளது. கோவில் பொங்கல் விழா, 2ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவில், நேற்று மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இரவு 9:00 மணிக்கு திருக்கம்பம் நடப்பட்டது. இன்று காலை 7:00 மணிக்கு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து, கணியான் அழைப்பு, இரவு 8:00 மணிக்கு படைக்கலம், அம்மன் அழைத்தல், இரவு 9:00 மணிக்கு சாமிகளுக்கு படையல் பூஜை மற்றும் அலங்கார பூஜை நடைபெறுகிறது. இரவு 11:00 மணிக்கு மாசாண சுடலை ஈஸ்வரர் மயான வேட்டைக்கு செல்லுதல், ஸ்ரீ சுடலை மகாராஜா கொதிக்கும் சுடுநீரில் குளித்தல் உள்ளிட்டவையும் நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை (28ம் தேதி) காலை 6:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து கோவிலில் பொங்கல் வைத்தல், 12:00 மணிக்கு உச்சி பூஜையை தொடர்ந்து வில்லுப்பாட்டு இரவு, 10:00 மணிக்கு கம்பம் கங்கையில் சேர்த்தல், 29ம் தேதி மஞ்சள் நீராடுதல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.