அன்னுார்; நாரணாபுரம், செல்லாண்டியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நடந்தது. நாரணாபுரம் ஊராட்சியில், வடுகபாளையம், உருமாண்ட கவுண்டன் புதூர், தீத்தாம்பாளையம் ஆகிய மூன்று ஊர்களுக்கு பொதுவான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் வேள்வி பூஜை, பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு, செல்லாண்டியம்மனுக்கு, புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.