திடிரென வானில் தோன்றிய சிவலிங்க உருவம்; பவானியில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2024 11:08
ஈரோடு மாவட்டம், பவானியில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, வானில் தோன்றிய சிவலிங்க உருவம். இதை பார்த்து பொதுமக்கள் பரவசமடைந்தனர்.
தமிழகத்தின் சிறந்த பரிகாரத்தலங்களில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலும் ஒன்று. பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. இத்தலத்து மண்ணிற்குள் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க ஈரோடு மாவட்டம், பவானி பகுதிகளில் சூரியன் மறையும் போது மேக கூட்டங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சில இடங்களில் சூரியன் மறையும் நேரத்தில் மேக கூட்டங்கள் பல்வேறு நிறங்களில் காட்சி அளித்தது. இந்நிலையில் பவானியில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வானம் மேகமூட்டத்தோடும், மேக கூட்டங்களில் சிவலிங்கம் தோன்றுவது போன்றும் காட்சியளித்தது. இது நேரம் செல்ல, செல்ல முழு சிவலிங்கம் இருப்பது போல் காட்சியளித்தது. இதைக்கண்ட மக்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இந்த காட்சியை சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.