பதிவு செய்த நாள்
05
செப்
2024
07:09
முல்பாகல்; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முல்பாகலில் பிரசித்தி பெற்ற குருடுமலை விநாயகர் கோவிலில் நாளை முதல் 11ம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை இரவு சிறப்பு பூஜைகள், 7ல் காலை விநாயகருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், இரவு மலர் அலங்காரம், கல்யாண உற்சவம், 8ல், மதியம் கலசம் பிரதிஷ்டை மற்றும் ரத உற்சவம் நடக்கும். பிரம்ம ரத உற்சவத்தை முல்பாகல் எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத் துவக்கி வைக்கிறார். வரும் 10ல், சஷ்டிராத்ரி தோபோற்சவம், 10ம் தேதி காலை, விநாயகருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், பூ அலங்காரம், வசந்த உற்சவம், 11ல் சயன உற்சவம் நடக்கும். உற்சவங்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்குமாறு, கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பண்டிகையை முன்னிட்டு, பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம், சங்கீத நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் என, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.