பதிவு செய்த நாள்
05
செப்
2024
10:09
திசையன்விளை; மணலிவிளை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா நடந்தது. திசையன்விளை மணலிவிளை முத்தாரம்மன் கோயில் கொடை விழாவில் உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கோலப்போட்டி, விளையாட்டு போட்டி, கும்பாபிஷேகம், சமயசொற்பொழிவு, திருவிளக்கு பூஜை, பரதநாட்டியம், பரிசு வழங்கல், மாக்காப்பு அலங்காரபூஜை, மணலிவிளைசுடலை ஆண்டவர் கோயிலில் இருந்து அபிஷேக நீர் எடுத்து வருதல், அபிஷேகம், தீபாராதனை, சமயசொற்பொழிவு, அற்புதவிநாயகர் கோயிலில் இருந்து பால்குடஊர்வலம், இன்னிசை, அபிஷேகபூஜை, மஞ்சள் பெட்டி ஊர்வலம், உச்சிக்காலபூஜை, அன்னதானம், வாணவேடிக்கை, மாவிளக்கு ஊர்வலம், மகுடம், வில்லிசை, மேளம், கும்பாட்டம், அன்னபூஜை, பொங்கலிடுதல், சுவாமி வீதி உலா, அம்மன் மஞ்சள் நீராடல், சிறப்பு அன்னதானம், நட்சத்திர கலைவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி இந்திரலிங்கம் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.