சாத்துார்; சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை கணக்கிடும் பணி நடந்தது. கோயில் உதவி ஆணையர் (கூ.பொ) சுரேஷ், கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் நிரந்தரஉண்டியல்கள், ஆடி கடைசி வெள்ளித் திருவிழாவிற்கு வைக்கப்பட்ட தற்காலிகஉண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை கணக்கிடும் பணி நடந்தது. பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாகரொக்கம் ரூ 86 லட்சத்து 66 ஆயிரத்து 397, தங்கம் 207 கிராம், வெள்ளி1124 கிராம் செலுத்தி இருந்தனர். கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.