கோவை ; விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவை ஈச்சனாரி விநாயகர், புளியகுளம் முந்தி விநாயகர்,ராம் நகர் பிரசன்ன மகா கணபதி,ஆர். எஸ். புரம் ஸ்ரீ வரசக்தி விநாயகர் மற்றும் பல கோவில்களில் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றனர்.இந்த நிகழ்ச்சிகள் ராம் நகர் பிரசன்ன மகாகணபதி சந்தன காப்பு அலங்காரத்திலும் ஆர். . புரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் வெள்ளி காப்பு கவசத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.