பதிவு செய்த நாள்
08
செப்
2024
12:09
திருப்பூர்; அவிநாசி அருகே ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சுவாமி பரிவார தெய்வங்களின் கோவில், நுாதன மஹா கும்பாபிஷேக விழா, வரும், 16ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, கும்பாபிேஷக விழா பூஜை, நேற்று அனுக்ஞை, தன பூஜை, கோ பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை பிரவேச பலி, ரஷோக்ன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இன்று, காலை திசா ஹோமம், நயனோன் மீலனம், சுவாமி கண் திறக்கும் வைபவமும், கஜ, கோ, அஸ்வ பூஜைகள் நடக்கிறது. மாலையில் சாந்தி ஹோம பூஜைகள் நடைபெறுகிறது.