பதிவு செய்த நாள்
08
செப்
2024
06:09
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி கடந்த 6ம் தேதி காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 4:30 மணியளவில் 4ம் காலயாகசாலை பூஜையும், 7.:45 மணியளவில் கடம் புறப்பாடாகி, 8:10 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 8:30 மணியளவில் மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து தீபாரதனை வழிபாடு நடந்தது. உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் ஜெய்சங்கர், அறங்காவலர் குழுத் தலைவர் பிரகாஷ், உறுப்பினர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.