கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2024 12:09
கீழக்கரை; கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் சஷ்டி பூஜை நடந்தது. நேற்று காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை மூலவருக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு வழிகாட்டி பாலமுருகன் அருள்பாலித்தார். பஞ்சமுக தீபாராதனை மற்றும் ஷோடஷ அலங்கார பூஜைகள் நடந்தது. பூஜைகளை அர்ச்சகர் விஸ்வநாதன் செய்திருந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.