Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துார்வாஷ்டமி, ஜேஷ்டாஷ்டமி; பூஜை ... புத்ரதா ஏகாதசி விரதம்; ஏழுமலையானை ஆராதிப்போம்.. அருளோடு ஆனந்தமாய் வாழ்வோம்..! புத்ரதா ஏகாதசி விரதம்; ஏழுமலையானை ...
முதல் பக்கம் » துளிகள்
கஜலட்சுமி விரதம்; மகாலட்சுமியை வழிபட மூப்பெரும் செல்வங்களும் கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
கஜலட்சுமி விரதம்; மகாலட்சுமியை வழிபட மூப்பெரும் செல்வங்களும் கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

13 செப்
2024
10:09

திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவள் கடலிலிருந்து வெளிப்பட்டதும் திசை யானைகள் எட்டும், எண் திசையிலிருந்தும் பொற்குடங்களில் தூய நீரை ஏந்தி வந்து நீராட்டின என்கிறது விஷ்ணு புராணம். இங்ஙனம், யானைகள் நீராட்ட நடுவில் வீற்றிருப்பதால், இவளை கஜலட்சுமி என்று அழைக்கின்றனர். 


இவளை விளக்கில் நிலைப்படுத்தி வணங்குவது, நெடுங்கால வழக்கம். விளக்கில் திருவாசிக்கு (பிரபைக்கு) நடுவே கஜலட்சுமி வடிவத்தை அமைக்கின்றனர். இவளைச் சாந்த லட்சுமி, தயா லட்சுமி, சுதந்திர லட்சுமி என்று பலவாறு போற்றுகின்றனர். சங்க இலக்கியங்களில் கஜலட்சுமியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பழங்காசுகளில் அவள் கஜலட்சுமியாகப் பொறிக்கப்பட்டுள்ளாள். வடநாட்டில் கண்டெடுக்கப்பட்ட சில முத்திரைகளில், மேற்கரங்களில் சங்கு, பறவை ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தருகிறாள் கஜலட்சுமி. யானைகள் சங்கின் மீதும் பறவையின் மீதும் நீரைப் பொழிகின்றன. தென்னிந்தியாவில் உள்ள பல கோயில்களில் லட்சுமியின் மேற்கரங்களில் உள்ள தாமரை மலர்களில் கிளிகள் வீற்றிருப்பதைக் காண்கிறோம்.


எண்திசை யானைகளும் இவளை நீராட்டுவதாக புராணங்கள் சொன்னாலும் நடைமுறையில் இரண்டு யானைகள் நீராட்டுவது போல் அமைத்துள்ளனர். மேற்கரங்களில் தாமரை மலர்களையும் கீழ்க் கரங்களில் அபயவரத முத்திரைகளையும் தாங்கி அருள்பாலிக்கிறாள் கஜலட்சுமி. சூக்தம் அவள் யானைகளின் பிளிறலால் மகிழ்வதாகக் கூறுகிறது. யானைகள் செல்வத்தின் அடையாளமாகும். 


யானையை லட்சுமியாகப் போற்றுகின்றனர். பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜ பூஜையால் மகிழும் மகாலட்சுமி, அந்த இடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள் என்று நம்புகினறனர். கஜலட்சுமி திருவடிவை வீட்டின் நிலைப்படிகளிலும் அமைப்பார்கள். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு, அவர்கள் விரும்பியதை விரும்பியவாறு நிறைவாக அளித்து, அந்த இல்லத்தில் சகல சௌபாக்கியங்களும் செல்வவளத்தையும் பெருகச்செய்வாள் திருமகள். தீபங்கள், யானைகள், பூரண கும்பம் ஆகியன லட்சுமிகடாட்சம் நிறைந்தவை. இந்த மூன்றும் இருக்கும் இடத்தில் செல்வவளத்துக்குக் குறைவிருக்காது. இன்று வீட்டில் விளக்கேற்றி வழிபட தோஷங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும்!

 
மேலும் துளிகள் »
temple news
தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும், உத்தராயண காலத்தில் வரும் முதல் ... மேலும்
 
temple news
இன்று பவுர்ணமி திதி, 17ம் தேதி காலை, 11:22 மணி முதல், 18ம் தேதி காலை, 9:10 மணி வரை உள்ளது. இதுவே பவுர்ணமி கிரிவலம் வர ... மேலும்
 
temple news
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே ... மேலும்
 
temple news
இன்று ஒரே நாளில் ஷடசீதி புண்ணிய காலம், அனந்த விரதம், பவுர்ணமி, புரட்டாசி மாத பிறப்பு என ஒன்றாக வருவது ... மேலும்
 
temple news
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் கவுரி விரத பூஜை செய்யப்படுகிறது. கவுரி விரதத்தில் சிவனையும், அம்மனையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar