Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கஜலட்சுமி விரதம்; மகாலட்சுமியை ... கதளீ கவுரி விரதம்; சிவ சக்தியை வழிபட சுக்ர தோஷம் நீங்கும்.. சுகமான வாழ்வு அமையும்! கதளீ கவுரி விரதம்; சிவ சக்தியை வழிபட ...
முதல் பக்கம் » துளிகள்
புத்ரதா ஏகாதசி விரதம்; ஏழுமலையானை ஆராதிப்போம்.. அருளோடு ஆனந்தமாய் வாழ்வோம்..!
எழுத்தின் அளவு:
புத்ரதா ஏகாதசி விரதம்; ஏழுமலையானை ஆராதிப்போம்.. அருளோடு ஆனந்தமாய் வாழ்வோம்..!

பதிவு செய்த நாள்

14 செப்
2024
10:09

ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி பெருமாள் வழிபாட்டுக்கு உரிய சிறந்த நாள். கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்தது ஏகாதசியன்று தான். ஆவணி மாத வளர்பிறை (சுக்ல பட்சத்தில்) வரும் ஏகாதசி திதியானது புத்ரதா ஏகாசதியாகும். இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்கியம் தந்து வம்சாவளி பெருக்கும்.  செல்வங்கள் பல இருந்தாலும், வம்சம் தழைக்க குழந்தை செல்வம் இல்லையென்றால், மற்றது அனைத்தும் இருந்தும் பயனில்லை என்று நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஏகாதசி மஹாத்மயத்தில் இந்த ஏகாதசியின் மகிமைகளைக் பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டரனிடம் கூறுகிறார்.


துவாபர யுகத்தில் மஹிமதிபூரி என்ற பத்ராவதி பட்டணத்தை ஆண்டுகொண்டிருந்த மஹிஜித் மன்னருக்கு அனைத்து செல்வங்களும் நிறைந்து இருந்தாலும் அவர் சாம்ராஜ்யத்தை ஆளுவதற்கு குழந்தை இல்லை. நீண்ட நாட்களாக மகப்பேறு இன்றி மிகவும் வருந்திய மன்னர் ஒருமுறை வேட்டையாடுவதற்காக, கானகம் சென்றபோது அங்குள்ள ஒரு நதிக்கரையில் சில முனிவர்கள் இருப்பதைக் கண்டார். அவர்களிடம் சென்ற மன்னர் அவர்கள் யார் என்று கேட்டு, தன் மனக்குறையை தீர்க்குமாறு வேண்டி நின்றார். அதற்கு முனிவர்கள்.. நாங்கள் தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள். இன்று ஸ்ரவணமாதமான தை மாத வளர்பிறை புத்திரதா ஏகாதசி திதி ஆகும். காக்கும் கடவுளான பகவான் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணாவதாரத்தை போற்றி விரதமிருந்து வழிபட்டால் முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி புத்திர பேறு உண்டாகும் என்று எடுத்துரைத்தனர்.


அதைக் கேட்ட மன்னரும் அன்று அவர்களுடன் அந்நதியில் நீராடி,  அன்று முழுவதும் ஒன்றும் உண்ணாமல் உபவாசமிருந்து பகவான்  ஸ்ரீமந் நாராயண நாமாவைத் தியானம் செய்து மறுநாள் துவாதசியன்று சில கனிகளை உண்டு உபவாசத்தை முடித்து நகருக்குத் திரும்பினான். சில நாட்களில் அவன் மனைவி கருத்தரித்து ஓர் மகனைப் பெற்றெடுத்தாள். இதனால் அதிக மகிழ்ச்சி அடைந்த மன்னன்பலவித தானங்களைச் செய்து தன் நாட்டு மக்களையும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூறினார். இன்று வீட்டில் பெருமாள், துளசி மாடத்தை வழிபடுதல் சிறந்த பலன் தரும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய மனக்குழப்பம் நீங்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும், உத்தராயண காலத்தில் வரும் முதல் ... மேலும்
 
temple news
இன்று பவுர்ணமி திதி, 17ம் தேதி காலை, 11:22 மணி முதல், 18ம் தேதி காலை, 9:10 மணி வரை உள்ளது. இதுவே பவுர்ணமி கிரிவலம் வர ... மேலும்
 
temple news
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே ... மேலும்
 
temple news
இன்று ஒரே நாளில் ஷடசீதி புண்ணிய காலம், அனந்த விரதம், பவுர்ணமி, புரட்டாசி மாத பிறப்பு என ஒன்றாக வருவது ... மேலும்
 
temple news
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் கவுரி விரத பூஜை செய்யப்படுகிறது. கவுரி விரதத்தில் சிவனையும், அம்மனையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar