Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முக்தாபரண சப்தமி; பார்வதி ... கஜலட்சுமி விரதம்; மகாலட்சுமியை வழிபட மூப்பெரும் செல்வங்களும் கிடைக்கும்! கஜலட்சுமி விரதம்; மகாலட்சுமியை ...
முதல் பக்கம் » துளிகள்
துார்வாஷ்டமி, ஜேஷ்டாஷ்டமி; பூஜை அறையில் அருகம் புல் வைத்து வழிபட மறவாதீர்!
எழுத்தின் அளவு:
துார்வாஷ்டமி, ஜேஷ்டாஷ்டமி; பூஜை அறையில் அருகம் புல் வைத்து வழிபட மறவாதீர்!

பதிவு செய்த நாள்

11 செப்
2024
10:09

அறுகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவிக்கவேண்டுமென்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையைப் புகழும் வகையில் வேதத்தில் பல மந்திரங்கள் உள்ளன. துர்க்கையைத் தவிர மற்ற எல்லா தேவதைகளுக்கும் தூர்வையால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்தது. துர்க்கையை அறுகம்புல்லினால் அர்ச்சனை செய்யலாகாது. உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. அவ்வகையில் தூர்வையை ஆராதிக்கும் தினம் பாத்ரபத சுக்லபட்ச அஷ்டமி. இதற்கு தூர்வாஷ்டமி என்று பெயர். இன்று தூர்வாஷ்டமி விரதத்தை எல்லாரும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாக பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதமாகும்.


இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பதால் சகல சவுபாக்கியங்களும் ஏற்படும். நமது பாரத தேசத்தை வளமாக வைத்துக்கொள்வதற்கும்; எல்லா இடத்திலும் உணவு, நீர், ஆடை நிறைவாகக் கிடைப்பதற்கும்; நீண்ட ஆயுளுடைய புத்திமான்களான- வீரர்களான புத்திரர்களைப் பெறுவதற்கும்; நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். இந்த தூர்வாஷ்டமி விரத பூஜாவிதி பவிஷ்ய புராணத்திலும், மதனரத்னத்திலும் கூறப்பட்டுள்ளது. தூர்வாஷ்டமி அன்று காலை நித்ய கர்மாக்களை முடித்துக்கொண்டு, நித்ய பூஜையையும் செய்தபிறகு இவ்விரதத்தைச் செய்யவேண்டும். பூஜையறையை சுத்தம்செய்து கோலமிட்டு விளக்கேற்றி, சுத்தம் செய்யப்பட்ட பலகையின்மேல் கோலமிட்டு, சுத்தமான இடத்தில் விளைந்த அறுகம்புல்லைப் பறித்துவந்து அப்பலகையின்மேல் பரப்பி, அதன்மேல் சிவலிங்கம் அல்லது படம் ஏதாவது ஒன்றை வைத்துப் பூஜிக்க வேண்டும். பூஜைக்கு எல்லாவிதமான இலைகளையும் மலர்களையும் எடுத்துக் கொள்ளலாம். அவைகளில் அறுகு, வன்னி இலை இரண்டும் அவசியம் இருக்கவேண்டும். பலகையில் பரப்பப்பட்ட அறுகம்புல்லின் நுனிபாகம் நம்மைநோக்கி இருக்கவேண்டும். புல்லைப் பறிக்கும்போது கணுக்கணுவாகத்தான் பறிக்கவேண்டும். ஆரம்பத்திலிருக்கும் முனை மட்டும்தான் நுனி என்கிற அர்த்தமில்லை. இது கணுக்கணுவாக வளர்வதால், நுனியைப் பறித்தாலும் அடுத்த கணுவே நுனி என்கிற கணக்குதான். ஆகையால் எல்லாக் கணுவையும் பறித்து அர்ச்சனை செய்யலாம். பகவானை அபிஷேகம் செய்து, ஷோடசோபசாரப் பூஜைகளைச் செய்து, 108 நாமங்களால் (சிவ அஷ்டோத்திரம், தேவி அஷ்டோத்திரம்) வணங்கி, அறுகு மற்றும் வன்னி இலைகளால் அர்ச்சிக்க வேண்டும். இன்று அருகம் புல்லை பூஜை அறையில் வைத்து வழிபட தடைகள் விலகி சந்தோஷம் பெருகும்!

 
மேலும் துளிகள் »
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதம். கார்த்திகை சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் ... மேலும்
 
temple news
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி ஆகும். தேய்பிறை பஞ்சமி வாராகி ... மேலும்
 
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 
temple news
திங்கட்கிழமை சிவனுக்குரிய சோமவார விரதம் மேற்கொள்வர். இதனை கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்பு. ... மேலும்
 
temple news
அபிஷேகப் பிரியரான ஈஸ்வரனை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி திருநாள் அன்று, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு உரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar