சாத்துார் வெற்றி விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2024 11:09
சாத்துார்; சாத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் உள்ள வெற்றி விநாயகர் கோயில் 35வது ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பின் விநாயகருக்கு இளநீர், மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்டபல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. தங்க கவசத்தில் விநாயகர் காட்சியளித்தார். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருவிழாக்குழுவினர் செய்திருந்தனர்.