தொழுகையின் போது பாட்டு போடாதீங்க: துர்கா பூஜைக்கு வங்கதேசத்தில் கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2024 12:09
டாக்கா: வங்கதேசத்தில் தினசரி தொழுகையின் போது துர்கா பூஜை பந்தல்களில் இசைக்கருவி இசைப்பது, பாடல்கள் ஒலிக்கவிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என, அந்நாட்டின் இடைக்கால அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டத்தின் போது, இங்கு வசிக்கும் ஹிந்து உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வங்கதேசத்தில் துர்கா பூஜை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா பூஜை பந்தல் அமைத்து, அங்கு பிரமாண்ட துர்க்கை சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவர்.