செங்கல் சிவபார்வதி கோவிலில் ஏழைகளுக்கு திரு ஓண பரிசு பொட்டலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2024 12:09
களியக்காவிளை; செங்கல் சிவபார்வதி கோவிலில் ஏழைகளுக்கு திரு ஓண பரிசு பொட்டலம் வழங்கப்பட்டது. களியக்காவிளை அருகே உதயன்குளம்கரை செங்கல் சிவபார்வதி கோவிலில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் மற்றும் வைகுண்டம் அமைந்து உள்ளது. கோவில் வளாக கணபதி மண்டபத்தில், விநாயகரின் 32 பாவனைகளை குறிக்கும் வகையில் சிலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் திரு ஓணத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு திரு ஓண பரிசு பொட்டலம் வழங்குவது வழக்கம். இந்த வருடம் சுமார் 500 ஏழைகளுக்கு சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி பரிசு பொட்டலம் வழங்கினார். நிகழ்ச்சியில், கோவில் மேல்சாந்தி குமார் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.