பதிவு செய்த நாள்
14
செப்
2024
12:09
நான்குநேரி; நான்குநேரி அருகேயுள்ள மஞ்சங்குளத்தில் தென்கரை மகாராஜேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. நான்குநேரி அருகேயுள்ள மஞ்சங்குளம் கிராமத்தில் தென்கரை மகாராஜேஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் நடந்து அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழாகடந்த11ம் தேதி மாலை 3:00 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து ஆஜ்ஜார்யவர்ணம், ராஷாஷ்ணஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து கலசம், பிரசாதசுத்தி, சுத்திக்கரியம், அஸ்திரகலச பூஜை நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு அஷ்டதிரவிய மஹாகணபதி ஹோமம், ஜ்வலத்ரோணி பூஜை, அனுஞ்ஞாகலசம், அனுஞ்ஞாப்ரார்த்தனை, கும்பாபிஷேக கலசபூஜை, கற்கரி கலக பூஜை, உபதேவதா கலச பூஜை, பிரம்ம கலச பூஜை, மஹாபிரம்மகலச பூஜைகள் நடந்தன. மாலை5:00 மணிக்கு வாலாலய உத்தேஷணம், ஜீவ கலசபூஜை, ஜீவ ஆவாகனம், ஆதிவாஷஹோமம், ஆதிவாஷபூஜை, அத்தாளபூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி உணர்தல், மஹாகணபதி ஹோமம், தேவர்களின்பீடபூஜை, பிரதிஷ்டபாணி மேளம், ஜீவப்ராண பிரதிஷ்டையை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, சிவனணைந்த பெருமாள், தளவாய் மாடசுவாமி உள்ளிட்ட பரிவாரமூர்த்திகளுக்கு மஹாகலசாபிஷேகம் மற்றும் மஹாகும்பாபிஷேகம்,சபரிகாரபூஜை, சிறப்பு மஹாதீப ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.