பதிவு செய்த நாள்
14
செப்
2024
04:09
உத்தமபாளையம்; உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உத்தமபாளையத்தில் உள்ள யோக நரசிங்க பெருமாள் கோயில் மிக பழமையும்,பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள யோக நரசிங்க பெருமாள், மகாலட்சுமி தாயார், ஆண்டாள் நாச்சியார், ரெங்கநாதர், கருடாழ்வார் , ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் இன்று வருஷாபிஷேகம் நடந்தது. காலையில் இரண்டாம் கால பூஜைகள், வருஷாபிஷேக பூஜைகள் , ஹோமங்கள் நடந்தது. யோக நரசிங்க பெருமாள் வெண்பட்டு உடுத்தியும், சீதேவி பூதேவியர்கள் பச்சைப்பட்டுத்தி சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். மங்கள வாத்தியம் முழங்க வேதமந்திரங்கள் ஒலிக்க காலை 11:30 மணியளவில் சீதேவி, பூதேவியர்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரண்டு இருந்த பக்தர்கள் நாராயணா... நாராயணா.. என்று முழக்கமிட்டனர். திருக்கல்யாணம் மற்றும் அபிஷேக ஆராதனைகளை அர்ச்சகர்கள் ரெங்கராஜன், முத்துக் குமார் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை ஒம் நமோ நாராயணா பக்த சபையினர் ஏற்பாட்டில் உபயதாரர்கள் செய்திருந்தனர்.