திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2024 06:09
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, பெரிய நந்திய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு பால், மஞ்சள், மூலிகை பொடி, சந்தன அபிஷேகம் நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு, மூன்றாம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரம்ம குளம் அருகே வைக்கப்பட்டுள்ள கோவில் மாதிரி வடிவம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் கண்ணாடி பொட்டியில் மிக அழகாக கோவில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டனர்.