திருப்பதி; திருமலை திருப்பதியில் அனந்த விரத வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருமலையில் அனந்த பத்மநாப சுவாமிக்கு அனந்த விரத வழிபாடு இன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத சுக்ல சதுா்த்தசியில் அனந்த பத்மநாப சுவாமி விரத வழிபாடு நடைபெறும். அதன்படி இன்று நடைபெற்ற வழிபாட்டில், திருமலை கோவிலில் இருந்து சுதா்சன சக்கரத்தாழ்வாா் கோயிலில் இருந்து ஊா்வலமாக சென்று, வராக சுவாமி கோயில் அருகில் அமைந்துள்ள திருக்குளத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 108 வைஷ்ணவ தலங்களிலும் அனந்த பத்மநாப விரதம் நடைபெறுவது குறிபிடத்தக்கது.