ஆலங்குளம் அம்மன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட பரோட்டா, சென்னா மசாலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2024 12:09
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் புரட்டாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழா கடந்த 13ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் புஷ்பாஞ்சலி, விளக்கு பூஜை என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. 17ம்தேதி முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா நிறைவு நாளை முன்னிட்டு நேற்று இரவு பக்தர்களுக்கு பரோட்டா, சென்னா மசாலா பிரசாதமாக வழங்கப்பட்டது.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது; பொதுவாக அம்மன் கோவில்களில் பொங்கல், புளியோதரை தான் பிரசாதமாக வழங்கப்படும். தமிழகத்திலேயே முதன் முதலாக சுடச்சுட பரோட்டா, சென்னா மசாலா பிரசாதமாக வழங்கப்பட்டது இங்கு தான் என்று மகிழ்ச்சியுடன் கூறினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டிப் போட்டு இதை வாங்கி சாப்பிட்டு சென்றனர்.