Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவருள் இன்றி திருவருள் இல்லை; ... புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுவது ஏன்? புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் ...
முதல் பக்கம் » துளிகள்
மகாபரணி; தவறவிடக் கூடாத நாள்.. முன்னோர்களின் பெயரை உச்சரித்தாலும் உயர்வு கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
மகாபரணி; தவறவிடக் கூடாத நாள்.. முன்னோர்களின் பெயரை உச்சரித்தாலும் உயர்வு கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

20 செப்
2024
02:09

மகாளய பட்சம் என்னும் முன்னோர் வழிபாட்டுக்கான 15 நாட்கள் செப்.18, 2024 முதல் தொடங்கி அக்.2, 2024ல் முடிகிறது. இந்நாட்களில் முன்னோரை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும். 


மகாளயபட்சத்தில் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்க பிதுர் உலகத்தில் இருந்து பூலோகம் வருகின்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்து உள்ளம், உடல் துாய்மையுடன் நாம் காத்திருக்க வேண்டும். வீட்டையும் சுத்தமாக வைக்க வேண்டும். குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வது கூடாது. இந்தக் காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. ஏனெனில் முன்னோருக்கான திதி, தர்ப்பணம், சிரார்த்தம், தானம், தர்மம் செய்வதில் ஈடுபட வேண்டும் என்பதற்காக. கன்னியாகுமரி, ராமேஸ்வரம், வேதாரண்யம், தனுஷ்கோடி போன்ற கடற்கரை தலங்களுக்கு செல்லலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு கீரை, பழம் கொடுக்கலாம். இதுவும் முடியாவிட்டால் முன்னோர்களின் பெயரை உச்சரித்து ‘காசி காசி’ என்று செல்லியபடியே, கால் மிதிபடாமல் வீட்டு வாசலில் எள்ளும், தண்ணீர் விட்டாலும் பலன் கிடைக்கும். 


இதில் மகாபரணி மற்றும் மத்யாஷ்டமி தினங்கள் முக்கியமானவை. திதிகள் எது என்று  அறியாதவர்கள் இந்த நாள்களில் பித்ரு காரியங்களைச் செய்வது சிறப்பு. நாளை  (செப்.21) மகா பரணி, மகாவியதி பாதம்(செப்.25), மத்யாஷ்டமி (செப்.25) அன்றும் வருகின்றன. இந்த நாட்களில் செய்யும் பித்ரு காரியங்கள் உரிய ஆத்மாக்களுக்கு சென்றடையும். இந்த நாளில் வீட்டில் தவறாமல் முன்னோர்களை நினைத்து வழிபட அவர்களின் ஆசி கிடைக்கும்.


விசேஷமான திதிகள் ; மகா பரணி (செப்.21), மகாவியதி பாதம்(செப்.25), மத்யாஷ்டமி (செப்.25), சுமங்கலிகளுக்கான அவிதவா நவமி (செப்.26), துறவிகளுக்கான சன்யஸ்த மகாளயம் (செப்.29) எனப்படும் துவாதசி திதி, விதவைகளுக்கான கஜச்சாயை (செப்.30) விபத்து, தற்கொலை உள்ளிட்ட துர்மரணம் ஏற்பட்டவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் சஸ்திர ஹத மகாளயம் (அக்.1). இந்த நாட்களில் உரியவர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பிதுர் ஆசி நமக்கு கிடைக்கும்.


 
மேலும் துளிகள் »
temple news
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியான இன்று பைரவரை வணங்குவதுடன், அன்னதானமும் செய்தால், நாம் படும் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதம். கார்த்திகை சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் ... மேலும்
 
temple news
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி ஆகும். தேய்பிறை பஞ்சமி வாராகி ... மேலும்
 
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 
temple news
திங்கட்கிழமை சிவனுக்குரிய சோமவார விரதம் மேற்கொள்வர். இதனை கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்பு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar